click here → MS EXCEL க்கு செல்வோம் .
OFFICEINTAMIL
Wednesday, 30 August 2017
MS ACCESS - INTRODUCTION
சாதாரணமாக எந்த application மூலமாக தகவலை சேமித்து வைத்தாலும்
நாம் அதை database தரவு தளம் என்றுதான் சொல்வோம். MS ACCESS ஐ DATABASE என்று
சொல்வதற்கும் மற்றவற்றை database என்று சொல்வதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. ஒரு application சரியான தரவு தளமாயிருக்க
வேண்டுமென்றால் அதில் இருக்கும் ஒவ்வொரு தரவையும் (TABLE)
இணையக்கூடிய ஒரு RELATIONSHIP (ஒரிங்கினைப்பான்) இருக்கவேண்டும். மேலும் அதில்
இருக்ககூடிய FIELD களுக்கும் ஒரு STRUCTURE (அமைப்பு) இருக்க வேண்டும். உதாரணமாக எக்ஸ்செல் கோப்பில் ஒவ்வொரு
ஷீட்டிலும் நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களுக்கு முதல் வரிசையில் அதனுடைய
பெயரை கொடுத்திருப்போம்.
NAME
|
GENDER
|
PAY
|
MURUGAN
|
MALE
|
80000
|
RAMAN
|
MALE
|
TWENTY
|
RAHIM
|
MALE
|
TWENTY
|
மேற் கண்ட உதாரணத்தில் PAY என்று ஒரு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பத்தியில் எண்ணை உள்ளீடாக கொடுத்தாலும் ஒப்புக்கொள்ளும் எழுத்துக்களை உள்ளீடாக
கொடுத்தாலும் ஒப்புக்கொள்ளும். இந்த பத்தியில் எண்களைத்தான் உள்ளீடாக கொடுக்கலாம்
வேறு எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று மறுதளிக்காது. அதோடுகூட ஒரு பத்தியில்
இருப்பதை கணக்கிட வேண்டுமென்றால் அந்தந்த செல்களின் முகவரியைத்தான் (CELL ADDRESS)
கொடுக்க வேண்டுமே தவிர பத்தி விவரத்தை கொடுத்தால் எக்ஸ்செல் ஒத்துக்கொள்ளாது. ஆனால் ACCESS ல் FIELD பெயரை கொடுத்தாலே
போதும். இது போன்று பல வித மான
வித்தியாசங்கள் உள்ளன. எக்ஸ்செல் போன்ற தகவல் தரவுகளை DATABASE என்று
சொல்லமாட்டோம். அவைகளை FLAT FILES என்றுதான் கூறுவோம்.
BACKEND (பின்புலம்)
ACCESS பின்புலத்தில் இயங்கக்கூடிய வல்லமையுடையது. BACKEND
என்பது மௌனமாக இயங்கும் ஒரு செயல்பாடு. நாம்
VB, c++ போன்ற கணினி மொழிகளையோ அல்லது அல்லது ACCESS யையோ முன்புலத்தில் FRONT END ஆக உபயோகிக்கும்போது வழக்கமான
செயல்பாடுகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இன்றி பின்னணியில் இயங்கக்கூடிய வல்லமை
வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
ü பல பயனாளர்கள் ஒரே சமயத்தில் பின்புலத்தை உபயோகிக்கும்படி
இருக்கவேண்டும்
ü உன்னதமான பாதுகாப்பு தன்மைகளை கொண்டதாக இருக்கவேண்டும்.
ü அதில் இருக்கும் தவல்களை சுலபமான வகையில் மீட்டெடுக்கவும்
பராமரிக்கவும் தகுந்தபடி இருக்கவேண்டும்.
ü உருவாக்கும் நடைமுறைகளையும் செயல்முறைகளையும் சேமிக்க வகை
வழிகள் இருக்கவேண்டும்.
ü கணினியில் அமைக்கப்பட்டிருக்கும் OPERATING SYSTEM த்துடன்
ஒத்துப்போவதாயிருக்க வேண்டும்.
ü FRONT END APPLICATION உடன் ஒத்துப்போவதாயிருக்க வேண்டும்.
இத்தனை தன்மைகளையும் ஒருங்கே கொண்டது MS ACCESS.
FRONT END (முன்புலம்)
FRONT END (முன்புலம்)
FRONT END என்பது பயனாளர்களை வழி நடத்தவும்,
பயனாளர்களிடமிருந்து தகவல்களை பெறவும், அவைகளை தேவைக்கு தகுந்தாற்போல் பின்புலத்தின்
உதவியுடன் கணிக்கவும், அட்டவணைகள் தயாரித்து பயனாளர்களுக்கு அளிக்கவும்
பயனாளர்களுக்கும் பின்புலத்திற்கும் ஒரு இணைப்பு பாலமாக விளங்குவது , FRONT END என்பது முன்புலத்தில்
பயன்படுத்தப்படும் CODE களுக்கு தகுந்தவாறு பின்புலத்திலிருந்து தகவலை பெற்று
தருவதாகும்.
MS ACCESS முன்புலமாக இயங்கக்கூடிய தன்மையையும் பெற்றது.
Subscribe to:
Comments (Atom)